தங்க நகைகள் பெட்டிக்குள் இருப்பதுபோன்று பெண்களும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், பெண்கள் பொதுவெளியில் நடந்தால் நாசம் ஏற்படும். பெண்கள் வீட்டில் அடங்கி ஒடுங்கி வாழ வேண்டும் என முஸ்லிம் மதகுருவும், சமஸ்த அமைப்பின் தலைவருமான கேரளத்தைச் சேர்ந்த காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முஸ்லியார் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். இது விவாதம் ஆனநிலையில் நேற்று அமைச்சரவை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் வி.டி.சதீசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து முதல்வர் வி.டி.சதீசன் கூறுகையில், "பொது இடங்களில் பெண்கள் நடமாடுவது தொடர்பாக காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார் கூறியுள்ள கருத்து, முற்போக்கு சிந்தனை கொண்ட கேரளாவுக்கு எந்த வகையிலும் பொருத்தமானதல்ல. 19-ம் நூற்றாண்டில் பேசப்பட வேண்டிய ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை அவர் இந்த 21-ம் நூற்றாண்டில் பேசிக் கொண்டிருக்கிறார். எங்கள் அரசுக்கோ, எங்கள் கட்சிக்கோ இந்த நிலைப்பாட்டில் துளியளவும் உடன்பாடில்லை. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பெண்கள் பொதுவாழ்வின் அனைத்து தளங்களிலும் சம உரிமையோடு பங்கேற்று முன்னேற வேண்டும் என்பதே எங்கள் அரசின் உறுதியான நிலைப்பாடு. காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முசலியார் இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே இது மிகத் தெளிவாகப் புரியும். நபிகள் நாயகத்தின் முதல் மனைவி கதீஜா ஒரு மாபெரும் வணிகராகத் திகழ்ந்தவர். அவரது மற்றொரு மனைவியான ஆயிஷா 'ஜமல்' போரில் படைகளை வழிநடத்திய தலைமைத் தளபதியாக நின்றவர். இஸ்லாமிய வரலாற்றில் போற்றப்படும் பில்கீஸ் நாடாண்ட ஒரு அரசி. நீதியாளரான கலீஃபா உமரின் அரசவையில் பெண்களுக்கு வழங்கப்படும் மஹர் தொகையைக் குறைக்க முடிவெடுத்தபோது, அதை நேருக்கு நேர் நின்று கேள்வி எழுப்பியது ஒரு பெண்தான்; கலீஃபா உமரும் அந்தப் பெண்ணின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார். அப்போதைய அரசவையிலேயே பெண்கள் அமர்ந்து உரிமை பேசினார்கள் என்பதையே இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது. கேரள முதல்வர் வி.டி.சதீசன் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியை கேரளாவிற்கு அழைத்து வருவதாகக் கூறி நடத்தப்பட்ட மோசடி புகார் குறித்து விளையாட்டுத்துறை தீவிரமாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையைத் தயாரித்துள்ளது. அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதன்மீது முறையான விசாரணை நடத்துவது குறித்து உள்துறை மிக விரைவில் முடிவெடுக்கும். பாலக்காடு ரயில்வே கோட்டப் பிரிப்பு விவகாரத்தில் கேரளாவின் கடுமையான எதிர்ப்பை மத்திய ரயில்வே அமைச்சரிடம் நாங்கள் முறைப்படி பதிவு செய்துள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரையும் ரயில்வே அமைச்சரையும் நேரில் சந்தித்துப் பேசி மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்" என்றார். 'கேரளா அல்லா. இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/a-regressive-19th-century-idea-kerala-cm-opposes-muslim-clerics-remarks




