திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 82 ஆயிரத்து 800 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 27 ஆயிரத்து 525 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 68 லட்சம் ஆகும். பக்தர்களுக்காக 4 லட்சத்து 34 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 54 ஆயிரம் லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. அஸ்வினி மருத்துவமனையில் 2 ஆயிரத்து 699 பக்தர்கள் மருத்துவச் சிகிச்சை பெற்றனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்டமெண்டுகளில் பக்தர் கள் நிரம்பினர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 12 முதல் 15 மணி நேரம் வரை ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/82800-devotees-offered-prayers-at-tirupati-in-a-single-day




