புதுடெல்லி, எனது கணவர் மட்டுமின்றி விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் காப்பாற்றப்பட்டதற்கு இறைவனுக்கு நன்றி என்று விமான கேப்டன் ஸ்மித் மச்சாரின் மனைவி தெரிவித்துள்ளார். 174 பயணிகள் காசா மீதான தாக்குதல், ஈரான் மீதான போர் போன்ற நடவடிக்கைகளால் இஸ்ரேல் மீது பல நாடுகள் குறிப்பாக வளைகுடா நாடுகளில் கடுைமயான கோபம் நிலவுகிறது. இந்த பரபரப்பான சூழலில் நேற்று முன்தினம் அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு விமானம் ஒன்று கிளம்பியது. அமீரக அரசுக்கு சொந்தமான 'பிளைதுபாய்' நிறுவனத்தின் அந்த விமானத்தில் 27 குழந்தைகள் உள்பட 174 பயணிகள் இருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேலியர்கள் ஆவர். விமானத்தின் தலைமை விமானியாக இந்தியாவை சேர்ந்த ஸ்மித் மச்சாரும், துணை விமானியாக ஓமன் நாட்டை சேர்ந்தவரும் இருந்தனர். விமானிக்கு கத்திக்குத்து விமானம் நடுவானில் 34 ஆயிரம் அடிக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் துணை விமானி, இந்திய விமானி ஸ்மித் மச்சாரை திடீெரன கத்தியால் குத்திவிட்டு விமானத்தை தரையில் மோதி தகர்க்க முயன்றார். இதில் பலத்த காயமடைந்த விமானி ஸ்மித் மச்சார், ரத்தம் சொட்ட சொட்ட பயணிகளையும், விமானத்தையும் பாதுகாக்க துணை விமானியு டன் போராடினார். அத்துடன் சாதுர்யமாக விமானிகளின் அறையையும் (காக்பிட்) திறந்து விட்டார். இதனால் விமானிகளுக்கு இடையே நடந்த மோதல் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் காக்பிட்டில் நுழைந்து, இந்திய விமானியை கத்தியால் குத்திய துணை விமானியுடன் கடுமையாக போராடி அவரை இருக்கையுடன் சேர்த்து கட்டினர். இதில் பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. 17 ஆயிரம் அடிக்கு கீழே இறங்கியது இதற்கிடையே விமானிகளுக்கு இடையே நடந்த மோதலில் விமானம் சில நொடிகளிலேயே 17 ஆயிரம் அடிக்கு கீழே இறங்கியது. இதனால் விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு அவசரகால செய்திகளும் பறந்தன. செய்வதறியாது பயணிகள் கதறினர். எனினும் விமான ஊழியர்கள், பயணிகள் மற்றும் இந்திய விமானியுடன் துரிதமாக செயல்பட்டு விமானத்தை சவுதி அரேபியாவின் தபூக் பகுதியில் உள்ள அவசரமாக தரையிறக்கினர். இதனால் விமானத்தை தரையில் மோதி தகர்க்க நடந்த துணை விமானியின் சதி முறியடிக்கப்பட்டு, அதில் இருந்த பயணிகள் உள்பட அனைவரும் காப்பாற்றப்பட்டனர். விமானம் தரையிறங்கியதும் படுகாயமடைந்த இந்திய விமானி மற்றும் பயணிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் துணை விமானியை சவுதி அரேபியா அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றனர். உலகை உலுக்கிய சம்பவம் நடுவானில் நடந்த இந்த பயங்கர சம்பவம் உலகம் முழுவதையும் உலுக்கி உள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களை விமானங்களை கொண்டு தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியதைப்போல மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக இதை உலக தலைவர்கள் கருதுகின்றனர். ஸ்மித்தின் மனைவி உருக்கம் இந்நிலையில் திறமையாகச் செயல்பட்டு 174 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித்திடம் பிரதமர் பேசியதற்கு, அவரது மனைவி சோனல் மச்சார் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “பிரதமர் மோடி தனது பிஸியான நேரத்திலும் எனது கணவரிடம் பேச நேரம் ஒதுக்கியது எங்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சியை தருகிறது. ஸ்மித் செய்த காரியத்தை கண்டு எங்கள் குடும்பமே பெருமிதம் கொள்கிறது. ஒரு நாட்டின் பிரதமர் ஒரு சாதாரண குடிமகனுக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் நேரில் போன் செய்து பேசுவது சாதாரண விஷயமல்ல. இதற்கு பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த நன்றிகள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எனது கணவர் தற்போது நலமுடன் இருக்கிறார். அந்த அச்சமூட்டும் சம்பவத்தின் நினைவுகள் மீண்டும் வந்து அவரைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக, விமானி அறையில் என்ன நடந்தது என்பது பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் முழுமையாகக் குணமடைந்தவுடன் அனைத்தையும் அவரே பகிர்ந்து கொள்வார். ஸ்மித்தின் உடல்நிலை குறித்து ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நாட்டு மக்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. எனது கணவர் மட்டுமின்றி விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் காப்பாற்றப்பட்டதற்கு இறைவனுக்கு நன்றி” என்று சோனல் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/i-was-devastated-when-i-heard-the-news-but-i-believed-everything-would-be-alright-says-smith-machars-wife-sonal




