ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) கனடா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் தன் ஓடிடி நிறுவனத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகள் தற்போது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு அம்சத்தை தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களும் பார்க்கவிருக்கும் முதல் 10 நிகழ்ச்சிகளின் பட்டியல்: 1. பிக் பாஸ் (Bigg Boss)இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ பிரான்சைஸ், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பங்களா ஆகிய ஆறு மொழிகளில் களமிறங்குகிறது. முதன்முறையாக, கனடா மற்றும் இங்கிலாந்தில் உள்ளவர்கள் இதில் நேரலை வாக்களிப்பு செய்ய முடியும். மேலும், கனடாவில் இந்தி பிக் பாஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு 7 நாட்களுக்கு முன்பே பார்க்க முடியும். கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் 24/7 நேரலை ஒளிபரப்பும் வழங்கப்படுவதால், முதன்மை நிகழ்ச்சியாக மாறியுள்ளது. பிக்பாஸ் 2. அழகே அழகு: தன் சொந்தக் கனவுகளுக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையே போராடும் ஒரு தைரியமான பெண்ணை மையமாகக் கொண்ட ஒரு தமிழ் குடும்பத் தொடர். 3. ஹார்ட் பீட்: பரபரப்பான மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் தர்மசங்கடங்களை மையமாகக் கொண்ட ஒரு மருத்துவத் தொடர். 4. அனுபமா (Anupamaa): ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் முன்னணி தினசரித் தொடரான இது, கனடா மற்றும் சிங்கப்பூரில் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு முன்பே பிரத்யேகமாகக் கிடைக்கிறது. 5. காஃபி வித் கரண் (Koffee With Karan)திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரண்'. 6. Yeh Rishta Kya Kehlata Hai: ஸ்டார் பிளஸின் மற்றொரு நீண்டகால குடும்ப நாடகத் தொடர் 7. அசுர் (Asur): 'அசுர்' தொடர், இந்தியப் புராணங்களையும் நவீன உளவியலையும் ஒரு கொடூரக் கொலை வழக்கின் விசாரணையோடு இணைத்து, குற்றவியல் த்ரில்லர் வகையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. Heartbeat Team 8. ஸ்பேஸ் ஜென்: சந்திரயான் (Space Gen: Chandrayaan):இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவான 'ஸ்பேஸ் ஜென்: சந்திரயான்', 9. பிரீதம் & பெட்ரோ (Pritam & Pedro): வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட இரு மனிதர்களின் பாதைகள் எதிர்பாராத விதமாக ஒன்றிணையும் போது, அவர்களுக்குள் உருவாகும் நட்பு, மோதல் மற்றும் சுயதேடலை இத்தொடர் பேசுகிறது. 10. லாஃப்டர் செஃப்ஸ் (Laughter Chefs): பிரபலங்கள், நகைச்சுவை மற்றும் சமையல் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி. Bigg Boss Tamil 10: பிக்பாஸ் வீட்டில் இந்த வருடம் என்ன ஸ்பெஷல்? - BB House Tour போலாமா? | Album முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/jiohotstar-has-expanded-its-ott-service-to-canada-the-uk-and-singapore



