ஈரோடு, உசிலம்பட்டியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரை கொன்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 50 வயதுடைய நபர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொப்பம்பாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 50 வயதுடைய நபர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் முடுக்கன்துறை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப்பதிவு மேலும் இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் கழுத்து எலும்புகள் உடைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்து யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணையை முடுக்கி விட்டனர். டிராவல்ஸ் அதிபர் விசாரணையில் பிணமாக கிடந்தவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீனிவாச நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50) என்பதும், டிராவல்ஸ் அதிபரான இவர் காரும் ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. அவருடைய மனைவி ரமாபிரபா என்பதும், இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளதும் தெரியவந்தது. ஜெயச்சந்திரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வாடகைக்கு கார் ஓட்டிச் செல்ல வந்ததாக ரமாபிரபா தெரிவித்தார். ஆனால் அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகே கார் இல்லை. எனவே மர்மநபர்கள் கொலை செய்து அவரது உடலை வாய்க்காலில் வீசிவிட்டு சென்றதாக தெரிகிறது. தேடுதல் வேட்டை இதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்த தனிப்படையினர் ஜெயச்சந்திரனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-travel-agency-owner-from-usilampatti-was-a-prior-enmity-the-cause




