புதுடெல்லி, அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் பதவிக்காலம், அவரின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பணி நீட்டிப்பு அமலாக்கத்துறை இயக்குனராக இருப்பவர் ராகுல் நவீன். கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி முதல் அவர் இந்த பொறுப்பு வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் ஆகஸ்டு 13-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், அவருக்கு ஓர் ஆண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு அவரது பதவிக்காலத்தை 2027-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. அவரது பணி ஓய்வு 2027 ஜூலை 31-ல் வருவதால், அதற்கு பிறகும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/enforcement-directorate-director-rahul-naveens-tenure-extended-by-one-year




