நீலகிரி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கஞ்சா சாக்லேட் விற்க முயன்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். வடமாநில வாலிபரிடம் போலீசார் சோதனை நீலகிரி மாவட்டம், ஊட்டி பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த வடமாநில வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். இதையடுத்து ஊட்டி மேற்கு போலீசார் அவரது பையை சோதனை செய்தனர். அதில் சாக்லேட்டுகள் இருந்தது. கஞ்சா சாக்லேட் வைத்திருந்தவர் கைது போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சர்பராஸ்அன்சாரி (வயது 27) என்பதும், கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்த அவர் பையில் வைத்திருந்தது கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் என்பதும் தெரியவந்தது. மேலும் சர்பராஸ்அன்சாரியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-youth-from-another-state-arrested-for-attempting-to-sell-cannabis-laced-chocolates



