ரோம், உலகக் கோப்பை கால்பந்தில் 4 முறை பட்டம் வென்ற அணியான இத்தாலி, தொடர்ந்து 3 முறை உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை. தகுதி சுற்றோடு வெளியேறி இருக்கிறது. புதிய தலைமை பயிற்சியாளர் இந்த நிலையில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பையை குறி, வைத்து இத்தாலியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராபர்ட்டோ மன்சினி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வென்ற போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரரான ராபர்ட்டோ மன்சினி 2023-ம் ஆண்டு திடீரென விலகினார். சவுதி அரேபியா இரு வாரம் கழித்து சவுதி அரேபியாவின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். தற்போது 3 ஆண்டுக்கு பிறகு அவரே இந்த பொறுப்புக்கு சரியான நபராக இருப்பார் என கூறி மறுபடியும் அவரை இத்தாலி கால்பந்து சம்மேளனம் இழுத்துள்ளது. முன்னாள் வீரர் முன்னதாக இத்தாலி முன்னாள் வீரர் ஆன்ட்ரியா பிர்லோ பயிற்சியாளராக நியிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரஷியாவை சேர்ந்த பெட்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் இருந்ததால் கடைசி நேரத்தில் இத்தாலி கால்பந்து சம்மேளனம் முடிவை மாற்றிக் கொண்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/roberto-mancini-named-italy-football-team-head-coach-for-second-time




