திருப்பதி, திருப்பதி மாவட்டம் புத்தூரில் பிரம்மோற்சவ விழாவிற்காக பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வாலிபர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மோற்சவ விழா ஏற்பாடு திருப்பதி மாவட்டம் புத்தூர் பகுதியில் புகழ்பெற்ற திரவுபதியம்மன்-தர்மராஜர் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அந்த பகுதியில் விழா ஏற்பாடுகளை பல்வேறு அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் மிக மும்முரமாக செய்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்தது இந்த நிலையில், புத்தூர் கே.என். சாலையில் உள்ள ஒரு பகுதியில் விழாவுக்காக இளைஞர்கள் சிலர் பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, பேனரின் ஒரு முனை அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசியதாக கூறப்படுகிறது. இதில், பேனரில் இருந்த இரும்பு கம்பிகள் வழியாக மின்சாரம் பாய்ந்தது. 2 பேர் பலி அந்த சமயத்தில் பேனரை பிடித்துக்கொண்டிருந்த புத்தூரை சேர்ந்த விக்னேஷ் (வயது 19), கோகுல் (18) ஆகிய இரு வாலிபர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரம்மோற்சவ விழா கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 2 வாலிபர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் புத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/two-teenagers-die-from-electrocution-while-erecting-banner




