கோவை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- கோயம்புத்தூர் மாவட்டத்தில் யூரியாவை திரவ நிலைக்கு மாற்றும் தொழிற்சாலைக்கு மத்திய அரசின் 2881 பாரத் யூரியா மூட்டைகளை கடத்தியதாக இரு லாரி டிரைவர்கள் மட்டும் கண் துடைப்புக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உயர் அலுவலர் தலைமையில் தனி குழு அமைக்க வேண்டும். உர மூட்டைகள் கடத்தல் கோயம்புத்தூர் அடுத்த மதுக்கரை அருகே தல்மனம்பாறை கிராமத்தில் தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைக்கு இரவு நேரங்களில் அதிக அளவில் லாரிகள் வந்து சென்றதை அறிந்த அப்பகுதி விவசாயிகள், கடந்த 4-ம் தேதி இரு லாரிகளை வழிமறித்து பார்த்தபோது, மத்திய அரசின் 2881 மானிய உர மூட்டைகள் கடத்தல் அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் 500 பாரத் யூரியா மூட்டைகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வேளாண்மைத் துறைக்கு தகவல் அளித்தனர். உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இதையடுத்து வேளாண்மைத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உர மூட்டைகளைப் பறிமுதல் செய்த பின்னர், தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்த தொழிற்சாலையில் ஆய்வு செய்தபோது, யூரியாவை உருக்கி திரவ நிலைக்கு மாற்றும் தொழிற்சாலை செயல்படுவது தெரியவந்தது. மேலும் அங்கு சுமார் 100 டன் அளவுக்கு மானிய உர மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. வளைகுடா போர் காரணமாக தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானிய உரத்தை கடத்தியுள்ளனர். வேளாண் துறையினரின் உதவியின்றி இவ்வளவு பெரிய அளவில் உர மூட்டைகள் கடத்தப்பட வாய்ப்பே இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். எனவே, தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடரும் பறிமுதல் செய்யப்பட்ட உரம் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக லாரி டிரைவர்கள் தெரிவித்தனர். “இதனால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை” என்று வேளாண்மைத் துறையினர் தெரிவித்தனர். ஆனால் விவசாயிகள் இதை ஏற்க மறுத்து, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். இதையடுத்து கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் கோயம்புத்தூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார் அளிக்க வேளாண்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. லாரிகள் பறிமுதல் இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தல்மனம்பாறை கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவரின் நிலத்தில் கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த ஆசிப் அலி என்பவர் சட்டவிரோதமாக இந்தத் தொழிற்சாலையை நடத்தி வந்தது தெரியவந்தது. அங்கு யூரியாவை உருக்கி, பிளைவுட் ஒட்ட பயன்படும் ரெசின் என்ற பசை தயாரித்து கேரளாவுக்கு அனுப்பியதும் கண்டறியப்பட்டது. மேலும் தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.38.42 லட்சம் மதிப்புள்ள 2,637 யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொழிற்சாலை உரிமையாளர் ஆசிப் அலி, நில உரிமையாளர் பாலகிருஷ்ணன், லாரி உரிமையாளர் மரிபாலன், டிரைவர்கள் செல்வம், பிரம்மயா, உர மூட்டைகளை அனுப்பிய ஈரோடு லட்சுமண சண்முகம், வெள்ளியங்கிரி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் கைது இந்நிலையில், தல்மனம்பாறை அருகே ரொட்டிக்கவுண்டனூரில் இன்னொரு தொழிற்சாலை செயல்படுவதை விவசாயிகள் கண்டுபிடித்து வேளாண்மைத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் சோதனை செய்தபோது, திரவ நிலை யூரியாவை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியும், தொழிற்சாலைக்குள் யூரியா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து ரூ.3.55 லட்சம் மதிப்புள்ள 244 யூரியா மூட்டைகள், டேங்கர் லாரி மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் முகமது ஜாபர், நில உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரு சட்டவிரோத தொழிற்சாலைகள் தொடர்பாக உரக் கட்டுப்பாடு சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லாரி டிரைவர்கள் செல்வம் மற்றும் பிரம்மயா ஆகிய இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/2881-central-government-subsidized-fertilizer-packages-smuggled-tamil-nadu-government-should-take-action-velmurugan



