திருப்பதி, ஆந்திர மாநிலம் திருமலையில் பணியாற்றி வருபவர் சம்பூர்ணம்மா. இவரின் மகளுக்கும், சுனில் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்தது. ஆனால், ஒரு சில மாதங்களுக்கு முன்பு சுனில் எந்த காரணமும் கூறாமல் மனைவியை விட்டு பிரிந்து சென்றதாக தெரிகிறது. மற்றொரு பெண்ணுடன் திருமணம் அவர் மீது வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் சுனில் மற்றொரு பெண்ணை திருமண செய்ய திருப்பதி-திருச்சானூர் சாலையில் உள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்துக்கு வருவதாக சம்பூர்ணம்மாவுக்கு தெரியவந்தது. உடனே அவர் தன்னுடைய மகளின் திருமணத்தில் முக்கிய பங்கு வகித்த திருப்பதி ஜீவகோணாவைச் சேர்ந்த முனிரத்னம் (வயது 50), மணிகண்டன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திருமண மண்டபத்துக்கு விரைந்து வந்து புதுமாப்பிள்ளை சுனிலிடம் 2-வது திருமணம் செய்வது குறித்து தட்டி கேட்டுள்ளனர். கொலை அப்போது அங்கு வந்த புதுமாப்பிள்ளை சுனிலின் தம்பி மற்றும் உறவினர்கள் சேர்ந்து முனிரத்னம், மணிகண்டன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அதில் முனிரத்னம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இரட்டை கொலை இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக புதுமாப்பிள்ளை சுனில் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியநிலையில், அவர்களை கைது செய்து சிறையில் அடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/police-arrest-three-for-double-murder-at-wedding-venue-in-tirupati-district




