திருவாரூர், படித்த படிப்புக்கான வேலை கிடைக்காததால் விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். பட்டதாரி வாலிபர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள தேவங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் பிரவீன்ராஜ் (24 வயது). இவர் பி.எஸ்சி. படித்து முடித்துள்ளார். பல இடங்களில் வேலை தேடியும் அவரது படிப்புக்கான வேலை கிடைக்கவில்லை. அதனால் தேவங்குடி பகுதியில் கூலி வேலைக்கு சென்று வந்தார். படித்த படிப்புக்கு ஏற்ற நல்ல வேலைக்கு செல்லுமாறு அவரது தாயார் ராஜேஸ்வரி அடிக்கடி கூறி வந்துள்ளார். விஷம் குடித்து தற்கொலை இந்த நிலையில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கூலி வேலைக்கு செல்ல வேண்டி உள்ளதே என மனவேதனை அடைந்த பிரவீன்ராஜ் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று அங்கிருந்த போர்செட்டில் களைக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். போலீசார் விசாரணை இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/frustration-over-lack-of-job-in-field-youths-tragic-decision




