புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு மாதம் இத்தனை முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இல்லை. எப்போது வேண்டுமானாலும் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139-வது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர் குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் கூடுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதம் 45.5 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டிய நிலையில் ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 88 டி.எம்.சி. திறக்க வேண்டிய நிலையில் 10 டி.எம்.சி. மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை காலை காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில், பிற்பகலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 55-வது கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/55th-meeting-of-the-cauvery-management-authority-to-be-held-tomorrow




