சென்னை, மேகதாது அணை பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நாடகம் நடத்துவது மோடி அரசுதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. தெரிவித்திருந்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டு இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் ஊருக்கே ஏன் உலகிற்கே தெரியும் என நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பாஜக தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தின் எந்த உரிமைகளை பறித்தது? என்ற எங்கள் நேரடிக் கேள்விக்கு பதில் கூற முடியாத நீங்கள், எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி தலையை சுத்தி மூக்கைத் தொட முயன்று கொண்டிருக்கிறீர்கள். நேஷனல் ஹெரால்டு உட்பட பல ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக அரியணையின் நிழலைக் கூட தொட முடியாமல் தோல்விக் கணக்கை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரர்களுக்கு யாரைக் குறை கூறுவதற்கும் தகுதியில்லை என்பதே எங்கள் வாதம். இதில் என்ன அவதூறு கண்டீர்கள்? விழித்துக் கொள்ளுங்கள் அதிலும் பழைய கூட்டணி பழக்கம் மாறாமல், ரூ.1 வரிக்கு 29 பைசா என்ற திமுகவின் அதே புளித்துப் போன பொய் பிரச்சாரத்தையே நீங்கள் இன்னும் நீட்டி முழக்கிக் கொண்டிருப்பதை பார்த்தால், காங்கிரஸ் இன்னும் "கோமா"வில் இருந்து மீளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் தானோ என்னமோ, வேலை நாட்களை 125 ஆகவும், ஊதியத்தை 300- க்கும் அதிகமாகவும் உயர்த்திய "VB G RAM G" திட்டத்தினை உங்கள் புதிய கூட்டணிக் கட்சியான தவெக தலைமையிலான அரசு, வரவேற்று செயல்படுத்திக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? களநிலவரம் தெரியாமல் அத்திட்டத்தினை நீங்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறீர்களே? Wake Up Sir! (விழித்துக் கொள்ளுங்கள்). திரும்பவும் சொல்கிறேன். கச்சத்தீவை தாரைவார்த்து தமிழக மீனவர்களை வஞ்சித்தது அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமர் இந்திராகாந்தி. எமர்ஜென்சி என்ற பெயரில் மாநிலங்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரித்ததும், Article 356 -ஐ பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை கவிழ்த்ததும் உங்கள் காங்கிரஸ் கட்சி. அதுமட்டுமன்றி காவிரி பங்கீட்டில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது உங்கள் காங்கிரஸ். முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை பிற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்து துரோகம் செய்தது உங்கள் காங்கிரஸ். தற்போது மேகதாது அணை கட்டுவதாகக் கூறி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதும் உங்கள் காங்கிரஸ் கட்சியே. இப்படி ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, கூட்டாட்சி தத்துவத்தை பலமுறை தீயிட்டு கொளுத்திய காங்கிரஸ் கட்சி, தற்போது மட்டும் மாநில உரிமைகளை பற்றி பேசுவது நியாயமா மாணிக்கம் தாகூரே? அதிலும் எப்பொழுதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் காவிரி, மேகதாது பிரச்சினைகளும் வருகின்றன. பல வருடங்கள் கழித்து தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உங்கள் காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு நல்லது செய்வதை பற்றி யோசிக்காமல், தமிழக மக்களுக்கு மீண்டும் எப்படி துரோகம் செய்யலாம் என உள்ளே சிந்தித்துக் கொண்டு, வெளியே தமிழகத்தின் உரிமைகள் பற்றி பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது” போலானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-congress-partys-betrayals-known-to-the-world-only-in-the-village-nainar-nagendrans-criticism




