சென்னை, ஜெம் வீரமணி மீது ஏற்கனவே 2 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரமணி மீதான வழக்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகார் அடிப்படையில் தொழில் அதிபர் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக செயல்பட்ட சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறப்பு புலனாய்வு படை இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு படையினர் சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஒரு வழக்கு இந்தசூழலில் தொழில் அதிபர் வீரமணியால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வீரமணி மீது புதிதாக மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெம் வீரமணி மீது ஏற்கனவே 2 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் எண் இதனிடையே வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக 93453-19676 என்ற செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்த செல்போன் எண்ணில் பேசியோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என சிறப்பு புலனாய்வு படையினர் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார்கள். ரகசியமாக வைக்கப்படும் புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறப்பு புலனாய்வு படையினர் தெரிவித்துள்ளனர். வீரமணியிடம் பணம் பறித்தவர்கள் குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-gem-veeramani-for-abetting-a-young-girls-suicide




