கட்டணம் உயர்வு திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன். மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட பல கோவில்களில் தரிசன கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பதை பெரிய அளவில் பக் தர்களுக்கு தெரிவிப்பது இல்லை. இவ்வாறு கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடும்போது இந்து சமய அறநிலையத்துறையின் இணை யதளங்களிலும், அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் இணையதளங்களிலும் விரிவான தகவல்கள் வெளியிட வேண்டும். கோவில் வளாகத்தில் பக்தர்கள் பார்வையில் தெரியுமாறு பெரிய அளவில் பிளக்ஸ்போர்டு வைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து அறநிலையத்துறை கமிஷனர் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது. அதேபோல் மற்றொரு வழக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 4 மாதத்தில் அறங்காவலர் குழு நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கும்போது தக்கார் தீர்மா னத்தை அடிப்படையாக வைத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசன கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக 20.6.2026 அன்று ஒருநாள் மட்டும் கோவில் அறிவிப்பு பலகையில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. உரிய நடவடிக்கை இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், பக்தர்களிடம் ஒப்புதல் பெற வில்லை. இதற்கிடையே திருச்செந்தூர் கோவிலில் கட்டணம் உயர்த்தப்ப டவில்லை. அதுதொடர்பாக கருத்துதான் கேட்கிறோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். ஐகோர்ட்டு உத்தர வின்படி அறங்காவலர் குழு அமைக்காத நிலையில் தக்கார் தீர்மானம் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு உள்ள கட்டண உயர்வு நடவடிக்கை செல்லாது என்றும், அறங்காவலர் குழு தீர்மானம் அடிப்படையில்தான் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, விதி முறைகளின்படி இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். அறநிலையத்துறைக்கு உத்தரவு இதையடுத்து நீதிபதிகள், திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டணத் தொகையை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்கள், பக்தர்கள் கருத்து தெரிவிப்பதற்கு மேலும் 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும். அதுமட்டு மல்லாமல் கட்டணத்தொகையை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்பதை பொதுமக்கள், பக்தர்கள் தெரிந்து கொள்ளும்படி அறநிலையத்துறையின் இணையதளம் உள்ளிட்ட பல் வேறு வகையிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-submitting-comments-on-the-hike-in-darshan-fees-at-the-tiruchendur-temple




