திருவனந்தபுரம், கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜனதாவை சேர்ந்த 20 கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது. சில கடவுள் பெயர்களை கூறி சத்யபிரமாணம் செய்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கேரளம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் பிரமாணம் செய்த 20 கவுன்சிலர்களின் பதவி ஏற்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, 20 கவுன்சிலர்களின் பதவி ஏற்பு செல்லாது என உத்தரவிட்டது. மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என கூறியிருந்தது. அதன்படி, 19 கவுன்சிலர்கள் மீண்டும் பதவியேற்று கொண்டனர். செய்தனர். இந்தநிலையில் ஒரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 20-வது வார்டு கவுன்சிலர் சுகதன், தான் பதவி ஏற்க இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரித்த போது, சுகதனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும், விய்யூர் மத்திய சிறையில் பதவி ஏற்க வசதி செய்து தரப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் தலைமையிலான இருவர் அமர்வு, சுகதன் சிறையில் வைத்து பதவி ஏற்றுக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/high-court-allows-bjp-councilor-to-take-oath-in-jail




