வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா. சபையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 87 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், கடந்த மே மாதம் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துவதில் டிரம்ப் மேற்கொண்ட தலையீட்டுக்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக டிரம்பின் "உறுதியான மற்றும் தொலைநோக்கு தலைமை" மற்றும் "சரியான நேரத்தில் மேற்கொண்ட தலையீட்டுக்கும் என்றி என செபாஷ் ஷெரீப் கூறிய காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. ஷெபாஸ் ஷெரீப்பின் பேச்சு வீடியோவை டிரம்ப் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் தனது சமூக வலைதள பக்கத்தில்பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி ஜம்முகாஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது. இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியத பாகிஸ்தான், போரை நிறுத்துமாறு கெஞ்சியது. இதையடுத்து, 4 நாட்கள் நீடித்த இந்த தாக்குதலை இந்தியா நிறுத்தியது. அதேநேரத்தில் பாகிஸ்தான் - இந்தியா இடையேயான போரை தானே நிறுத்தியதாகவும் நான் தலையிடாவிட்டால் அணு ஆயுத போர் வெடித்து இருக்கும் என்றும் டிரம்ப் தம்பட்டம் அடித்து வருகிறார். டிரம்பின் இந்த கூற்றை இந்தியா நிராகரித்து வருகிறது. ஆனாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் டிரம்ப் தொடர்ந்து இதனை பதிவு செய்து வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/trump-shares-sharifs-un-speech-clip-on-op-sindoor




