உலகின் வாழச் சிறந்த நகரங்களில் சென்னைக்கு 123-வது இடம் கிடைத்துள்ளதும், பல இந்திய நகரங்கள் பின் தங்கியுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி இங்கிலாந்தைச் சேர்ந்த 'எக்னாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ யூனிட் ' என்ற அமைபு ஒவ்வொரு ஆண்டும் உலகில் வாழச் சிறந்த நகரங்கள் (The Global Liveability Index 2026) எவை என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு நகரங்களின் அரசியல் சூழல், பொருளாதார வளர்ச்சி, சுகாதார வசதி, உள் கட்டமைப்பு, குற்றங்களின் விகிதம், உள்நாட்டு கலவரங்கள் அல்லது போர்கள் இல்லாத பாதுகாப்பான சூழல், தரமான மருத்துவ வசதிகள், தூய்மையான சூழல், கால நிலை, பொழுதுபோக்கு, பண்பாட்டு சுதந்திரம், சிறந்த கல்வி நிலையங்கள், சிறப்பான போகுவரத்து, குடிநீர், மின்சார சேவை, தொலைதொடர்பு வசதிகளை அடிப்படையாக வைத்து 100 புள்ளிகள் அடிப்படையில் ஆய்வு செய்து இந்தப் பட்டியலைத் தயார் செய்து வெளியிடுகிறது. முதல் 10 நகரங்கள் அந்த வகையில் 2026 ஆம் அண்டுக்கான பட்டியலில் மொத்தம் 173 நகரங்களைக் கணக்கிட்டு புள்ளிகள் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரம் முதலிடத்திலும், ஆஸ்திரியாவின் வியன்னா இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, மூன்றாவது, நான்காவது இடத்திலும் ஸ்விஸ்சின் சூரிச் ஐந்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியாவிலுள்ள நகரங்கள் மிகவும் பின் தங்கியுள்ளன. டெல்லி 120வது இடத்திலும் மும்பை 121வது இடத்திலும்,சென்னை 123வது இடத்திலும், பெங்களூரு 127வது இடத்திலும் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியா, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தபோதும், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாடு, உள்கட்டமைப்பு நெரிசல், சுகாதார சேவைகளில் பின் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் முக்கியப் பொருளாதார மையங்களாக இந்திய நகரங்கள் வளர்ந்து வந்தாலும் உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் காரணிகளை மேம்படுத்துவது அவசியம் என்றும் இவ்வமைப்பின் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அதே நேரம், இந்தப் பட்டியலில் இந்திய நகரங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்ற குரல்களும் எழுந்துள்ளன. தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல - அமைச்சர் நிர்மல்குமார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/lifestyle/what-rank-does-chennai-hold-among-the-worlds-best-cities-to-live-in




