சென்னை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர், உறுப்பினர் மற்றும் உறுப்பினர் (சட்டம்) ஆகிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “மின்சார சட்டம் 2003-ன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாணயத்தில் 19.06.2026 முதல் தலைவர் பதவியும், 09.03.2026 முதல் உறுப்பினர் (சட்டம்) பதவியும், 01.06.2026 முதல் உறுப்பினர் பதவியும் காலியாக உள்ளது. இந்த மூன்று பதவிகளையும் நிரப்புவதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்கா ராமன் தலைமையில், அரசு தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. 07.07.2026 அன்று நடைபெற்ற தேர்வுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர், உறுப்பினர் மற்றும் உறுப்பினர் (சட்டம்) ஆகிய பதவிகளை நிரப்புவதற்காக ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் 28.07.2026 அன்று மாலை 6.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன. மேலும் இது குறித்த விவரங்கள் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-invited-for-the-post-of-chairperson-of-the-tamil-nadu-electricity-regulatory-commission




