இறைவன் அருள் கிடைக்க உண்ணாமல் இருந்து, அல்லது அந்தந்த இறைவனுக்குரிய உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வழிபாடு செய்வதை 'விரதம்' என்கிறோம். 'நோன்பு' என்பதே இதன் தூய்மையான தமிழ்ச்சொல். வார விரதங்கள், மாத விரதங்கள், வருட விரதங்கள், ஏகாதசி, அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, சதுர்த்தி போன்ற திதி விரதங்கள் என்று எண்ணற்ற விரதங்கள் இருக்கின்றன. விரதம் மேற்கொள்பவர்கள் ஜாதக அடிப்படையில் எந்த விரதம் இருந்தால் நல்லது என்பதை அறிந்து, அவரவரின் வேண்டுதலுக்கு ஏற்ற விரதங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இனிய பலன்களைப் பெறலாம். விரதம் இருக்கும் நாளில் தெய்வ சிந்தனையில் இருக்க வேண்டும். எதிர்மறை சொற்களைப் பேசக்கூடாது. மற்றவர்களின் மனதைப் புண்பட வைக்கக் கூடாது. உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் மாலையில் அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்றும் வழிபடலாம். வழிபாடு விரத காலத்தில் செய்யக்கூடாத செயல்கள் விரதம் இருக்கும் நாட்களில் பகலில் தூங்கக் கூடாது. அந்த நேரத்தில் சினிமா, டி.வி. பார்ப்பது, கேளிக்கை விருந்துகளில் கலந்துகொண்டு குடும்பக் கதைகளைப் பேசுவது, பிறருடன் சண்டை போடுவது, உரக்கப் பேசுவது, வன்மையான வார்த்தைகளால் பிறரைத் திட்டுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் விரதத்திற்கான முழுப் பலனும் கிடைக்கும். அன்றையதினம் அணியும் ஆடைகள் கூட, யோகம் தரும் நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்தால் நல்லது. இறை சிந்தனையோடு, இறைவனின் நாமங்களை உச்சரித்தபடி இருக்கவேண்டும். விரதம் முழுமை பெற. விதவிதமான உணவு எதிரில் இருந்தும், அதைச் சாப்பிடாமல் மனக்கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டும் விரதம் பூர்த்தியாகாது. இந்த கட்டுப்பாட்டுடன் இறை சிந்தனையும் இருந்தால்தான் அது முழுமையான விரதமாகும். விரதத்தை நிறைவு செய்யும்போது எளிமையான உணவுதான் உண்ண வேண்டும். இதுவே இறைவனின் அருளைப் பெற வழியாகும். பெண் தெய்வ வழிபாடு பெண் தெய்வ வழிபாட்டிற்கு பெருமை சேர்க்கும் தலங்கள் தமிழ்நாட்டில் ஏராளம் இருக்கின்றன. அதில் எந்த கோவிலுக்கு செல்ல முடியுமோ, அந்த கோவிலுக்குச் சென்று நவராத்திரியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளலாம். இதன்மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு கருமாரி அம்மன், சமயபுரம் மாரியம்மன், காரைக்குடி கொப்புடையம்மன், நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள், கீழக்கோட்டை காளியம்மன், சிறுகூடல்பட்டி மலையரசி அம்மன், இரணியூர் பத்ரகாளியம்மன், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், கோவை கோணியம்மன், திருநெல்வேலி காந்திமதியம்மன், வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகி, பொள்ளாச்சி மாசானி அம்மன், திருக்கடவூர் அபிராமி அம்மன், மயிலாப்பூர் கற்பகாம்பாள் போன்ற பெண் தெய்வங்கள் பிரசித்தி பெற்ற தெய்வங்கள். அவர்களின் சன்னிதிக்கு நேரில் சென்று வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/viratham-is-not-merely-about-dietary-restrictions




