‘செல்லமே’ படம் மூலம் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானவர் விஷால். அவர் அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் தற்போது காதலித்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று பல வேலைகளில் பிஸியாக இருந்தாலும் பல வருஷங்களாக மாணவர்களின் கல்விக்கும் உதவி செய்து வருகிறார். குறிப்பாக பொருளாதார சுழல் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் உதவிகளை செய்து வருகிறார். ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் 45-வது அறிமுக இயக்குநர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார். விஷால் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மகுடம்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புருஷன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால் இந்நிலையில், தான் திரையுலகிற்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவடைந்ததாக நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார். ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் கலை மீதான பேரார்வத்துடன் இப்பயணம் தொடரும் என்று கூறியுள்ளார். 22 YEARS IN CINEMA. The journey continues — with the same discipline, dedication and passion for the craft. — Vishal (@VishalKOfficial) August 15, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-vishals-resilience-record-after-completing-22-years-in-the-film-industry




