வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கியது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். எம்.ஐ. நியூயார்க் - சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் இந்நிலையில், இத்தொடரில் கலிபோர்னியாவில் இன்று நடைபெற்று வரும் 22வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் - சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூயார்க் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டும் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கார்பின் போஷ் 21 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய சான் பிரான்சிஸ்கோ கேப்டன் மேத்திவ் ஷாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சான் பிரான்சிஸ்கோ களமிறங்கி விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/major-league-cricket-san-francisco-unicorns-vs-mi-new-york-match-score




