கரூர், முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கரூரில் விஜய் கரூரில் தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை 9 மணிக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவர், காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் திருச்சி புறப்பட்டு சென்றார். காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து கரூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். மலர் தூவி வரவேற்பு காரில் முதல்-அமைச்சர் செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். இதனை தொடர்ந்து கரூரில் அவர் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதல்-அமைச்சர் விஜய்யின் காரில் மலர் தூவி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தானர். இதன் பின்னர் கரூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-toured-karur-as-chief-minister




