வாஷிங்டன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி நபரான வெங்கடாசலம் மணி என்பவர், தனக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் குடியிருந்து வந்தார். இந்த நிலையில், வெங்கடாசலம் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற வெங்கடாசலத்தை அந்த பெண் திட்டி அனுப்பியுள்ளார். இதன் பிறகு அந்த பெண்ணுக்கு பல வழிகளில் வெங்கடாசலம் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார். வீட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு மற்றும் ரிப்பேர் பணிகளை செய்ய மறுத்துள்ளார். இதனால் வெறுப்படைந்த அந்த பெண், இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய பென்சில்வேனியா போலீசார், 'பேர் ஹவுசிங் ஆக்ட்' (Fair Housing Act) சட்டத்தை மீறி, வீட்டில் குடியிருந்த வாடகைதாரரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, பாகுபாட்டுடன் வெங்கடாசலம் நடந்து கொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வெங்கடாசலம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/case-registered-against-indian-origin-landlord-in-the-us-for-sexually-harassing-a-female-tenant




