தூத்துக்குடி, தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், நகர்ப்புற மின் விநியோக பிரிவிற்கு உட்பட்ட துணைமின் நிலைய பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி நகர் விநியோக செயற்பொறியாளர் எல்.சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், அரசு துணை மின் நிலையத்தில் நாளை (30.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இதன் காரணமாக மேலஅரசடி, கீழஅரசடி தருவைகுளம் மற்றும் தருவைகுளம் உப்பளப் பகுதிகள் பட்டினமருதூர் மற்றும் பட்டினமருதூர் உப்பளப் பகுதிகள் சில்லாநத்தம் வாலசமுத்திரம் கிழக்குக் கடற்கரை சாலை, புதூர்பாண்டியாபுரம், எட்டையாபுரம் ரோடு வடபுறம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-5




