செயின்ட் கிட்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - ஜமைக்கா கிங்ஸ்மென் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெவிஸ் பேட்ரியாட்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஜமைக்கா வெற்றி இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சயிம் நயீப் அதிகபட்சமாக 102 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்சை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜமைக்கா கிங்ஸ்மென் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஜமைக்கா வீரர்கள் ஜெடியா பிளேடஸ், ஹனாய் ஷா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-jamaica-stun-nevis-patriots-2




