ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள்! ஓணம் திருநாளின் மகிழ்ச்சியும், இனிமையும் நம் வாழ்வில் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை கொண்டு வரட்டும். இந்த மங்களகரமான திருநாள் நம் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வரட்டும்'‘ என்று பதிவிட்டுள்ளார். ஒணம் பண்டிகை கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாள் என்று ஒணம் அழைக்கப்படுகிறது. ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் மலையாள மக்கள் அனைவராலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மலையாள வருடத்தின் கொல்லவர்ஷத்தின் சிங்கம் மாதத்தில் துவங்கி திருவோணம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகாபலி மன்னரை வரவேற்று வீடுகளின் வாசலில், பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, சத்யா உணவை உறவினர்களுடன் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள், இன்று ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். கேரள எல்லையோரத்தில் உள்ள தமிழக ஊர்களிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-union-minister-of-state-l-murugan-extends-greetings



