தூத்துக்குடி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு தற்போது காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதையடுத்து, திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், நாழிக்கிணற்றில் நீராடிவிட்டு, குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளிலும் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/surging-crowds-of-devotees-at-tiruchendur-4-hour-wait-for-darshan




