சென்னை, தமிழக விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்யும் பணியை தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்கிறது. இதற்காக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு வழங்குகிறது. அதனுடன் தமிழக அரசும் ஊக்கத்தொகை வழங்குகிறது. நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நெல் கொள்முதல் பருவம் இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒரு மாதம் முன்கூட்டியே, அதாவது, செப்டம்பர் 1-ந்தேதி முதல் நெல் கொள்முதல் சீசன் தொடங்கப்பட்டது. இதை பின்பற்றி தற்போதைய த.வெ.க. அரசு சார்பில் தமிழக உணவுத்துறை செயலர் அமுதா 2026-27 பருவ நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ந்தேதி தொடங்க அனுமதி கேட்டு மத்திய உணவுத்துறைக்கு கடந்த 8-ந்தேதி கடிதம் எழுதினார். இதை பரிசீலித்த மத்திய அரசு, பருவ நெல் கொள்முதல் காலத்தை செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்க நேற்று அனுமதி அளித்துள்ளார். நெல் கொள்முதல் அளவு மற்றும் அரவை செய்து அரிசி ஒப்படைக்கும் காலம் ஆகியவை குறித்து வரும் 1-ந்தேதி டெல்லியில் நடக்கும் அனைத்து மாநில உணவுத்துறை செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-grants-permission-to-commence-the-seasonal-paddy-procurement-period-in-tamil-nadu-from-september-1st



