சென்னை, சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும், அவர்களுடன் பேசி கட்சியை பலப்படுத்த வேண்டும் என பழனிசாமிக்கு வேலுமணி, விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து கடிதம் எழுதி உள்ளனர். 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம் இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராகிய நீங்கள், கட்சியை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளால், 47 சட்டமன்ற உறுப்பினர்களில், 25 சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தவறு என்பதை, சுட்டிக்காட்டினர். மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்கள் சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் ஒத்துக்கொண்ட நிலையில் நீங்கள் அதை உதாசீனப்படுத்தியதால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அன்று டிடிவி தினகரன் அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம், என்று நிராகரித்தீர்கள். 2019ல் அஇஅதிமு.க தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது, நம்மோடு கூட்டணியாக இணைந்து பயணித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம் கட்சி மற்றும் தனி கட்சியாக இருந்த சரத்குமார் ஆகியோரை அரவணைக்காமல் 2021 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றினீர்கள். நிர்வாகிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க டெல்லி தலைமை பலமுறை கூட்டணி வைக்க முயன்றும் கூட்டணியாக நம்முடைய அனைத்து கோரிக்கைகளையும் செய்வதாக கூறிய போதும் தன்னிச்சையாக முன்யோசனை இல்லாமல் செயல்பட்டதால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற வலிய வாய்ப்பை வழங்கினீர்கள். அது மட்டுமில்லாது உங்களுடைய இந்த தவறான முடிவால் பல கழக வேட்பாளர்கள் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு கோடிக்கனக்கான ரூபாய் இழந்து நிற்கிறார்கள். அதுபோன்று பா.ம.க கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்த போதும், ஒரு மாத காலம் அதை உறுதி செய்யாமல் காலதாமதம் செய்த காரணத்தால் கூட்டணி வாய்ப்பை இழந்தோம், இப்படி தேடிவந்த பா.ஜ.க., பா.ம.க போன்ற கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளை தன்னிச்சையாக நிராகரித்தீர்கள். அதேபோல் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பலமுறை பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக தெரிவித்ததோடு, கூட்டணிக்கு நம்மை நாடி வந்த தே.மு.தி.க மற்றும் புதிய தமிழகம் கட்சிகளை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றிவிட்டீர்கள். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் அதனால், 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்களை அதே பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். சசிகலா, டிடிவி தினகரனிடம் பேசி கட்சியில் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும். 6 மாதத்தில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன் அதிமுகவை பலப்படுத்தியே ஆக வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/sasikala-and-dinakaran-should-be-included-in-the-party-velumani-viswanathan-raise-the-war-flag-again




