தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி தனிச்சையாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ``இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையர் உட்பட எந்தவொரு தனி அதிகாரியும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர் அல்ல. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, மூன்று ஆணையர்களும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பார்கள். தேர்தல் ஆணையம் ஆனால் இறுதி முடிவு என்பது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ அல்லது பெரும்பான்மை வாக்களிப்பின் அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும். மூன்றில் இரண்டு ஆணையர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதுவே பெரும்பான்மையாகும். இரு ஆணையர்கள் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டார் என்பதுதான் தற்போதைய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி, பலத்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், ஒருமுறை தேர்தல் முடிந்துவிட்டால் அதை யாரும் ரத்து செய்ய முடியாது. முடிந்த விஷயம் முடிந்ததுதான். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. அதற்காக முறையான நிர்வாக மற்றும் அரசியல் சாசன நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும். யாராவது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கைகளைத் தொடங்கினால் மட்டுமே அடுத்தகட்ட செயல்பாடுகள் தெரியவரும். ஓ.பி. ராவத் வாக்காளர் சேர்க்கைக்கான 'ஃபார்ம் 6'-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் என்பது, குடியரசுத் தலைவர் அல்லது நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் இன்றி தேர்தல் ஆணையம் தனது வரம்பை மீறி செயல்பட்டுள்ளதைதான் சுட்டிக்காட்டுகிறது. 6-ல் இரண்டு வகையான விண்ணப்பங்கள் உள்ளன. ஒன்று புதிய வாக்காளர்களுக்கானது, மற்றொன்று பழைய வாக்காளர்களுக்கானது. உதாரணமாக, 40 வயது நபர் ஒருவர் இதுவரை எங்குமே வாக்காளராகப் பதிவு செய்யாமல் புதிதாக விண்ணப்பிக்கும் போது, இத்தனை காலம் அவர் எங்கு இருந்தார் என்ற சந்தேகம் எழுவது இயல்பு. அதற்காக அவர்களின் பெற்றோர் மற்றும் பிற கூடுதல் விவரங்களைக் கேட்கும் தனிப் படிவம் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கும் பெற்றோர் குறித்த விவரங்களை கட்டாயமாக்கி, அந்தத் படிவத்தை அனைவருக்கும் பொதுவாக்கியுள்ளது. இது 'பாரம் 6'-ல் செய்யப்பட்டத் திருத்தத்திற்குச் சமம். எந்தவொரு படிவத்திலும் திருத்தம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. இதனால் தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார். SIR சர்ச்சை: "பாஜக, RSS, தேர்தல் ஆணையம் ஆகியவை தேசத் துரோகம் செய்துள்ளன” - ராகுல் காந்தி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/governance/a-former-election-commissioner-has-explained-the-functioning-of-the-election-commission



