மதுரை, மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். 40 வருட சர்ச்சை மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது:- தமிழகத்தில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணிைய அமைத்து உள்ளோம். எம்.பி.க்கள் இருந்தால்தான் இந்தியா கூட்டணியில் இருக்க முடியும். அதுவரை தமிழகத்தில் இதே பெயரில் கூட்டணி செயல்படும். இன்னும் நிறைய காலம் இருக்கிறது. திரும்பத்திரும்ப அதை பற்றி பேச வேண்டாம். மிசா குறித்து முதல்-அமைச்சர் பேசியதற்கு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அவர் பேசியதில் தவறு இல்லை. மிசா சட்டம் மு.க.ஸ்டாலினை தியாகியாக காட்ட மீண்டும் மீண்டும் முயற்சிப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. தியாகி என்றெல்லாம் சொல்ல முடியாது. அவசர நிலையின்போது மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை. வேறு ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட் டார். இது 30, 40 வருட சர்ச்சை. மிசா சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு. ஆதாரம் ஏதாவது உள்ளதா? இதுவரைக்கும் உத்தரவு நகல் எதையும் காட்ட வில்லை. ஏதோ புத்தகத்தையும் பத்திரிகை செய்தியையும் காட்டுகிறார்கள். ஆதாரம் அழிப்பு ஒருவரை கைது செய்திருந்தால் அதுகுறித்த டின்டேஷன் நகலை காட்ட வேண்டும். அதுபோன்ற நகல் இல்லாத தியாகிதான் அவர். மேலும் வெளியிடப்பட்ட சில ஆவணங்கள், சர்க்காரியா கமிஷனில் போடப்பட்ட சாட்சி ஆவணங்கள் என்று கூறுகிறார்கள். மு.க.ஸ்டாலின் கைது குறித்த உண்மை ஆதாரம் கிடைக்கக்கூடாது என தி.மு.க. ஆட்சி யில் அழித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். டெபாசிட் கூட கிடைக்காது 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது. இதுபற்றி நன்றாக தெரிந்ததால்தான், பரந்தாமன் என்ற எழும்பூரை சேர்ந்த வெளியூர் வேட் பாளரை மதுராந்தகத்திற்கு தி.மு.க.வினர் கொண்டு வந்திருக்கிறார்கள். 2 தொகுதிகளிலும் திருமங்கலம் பார்முலா என எத்தனை ரூ.100 கோடி செலவு செய்தாலும், மக்கள் அதனை வாங்கிக்கொண்டு, மக்கள் என்ன செய்வார்களோ அதனை செய்வார்கள். தி.மு.க.வை மக்கள் தூக்கி எறிந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-not-arrested-under-misa-act-minister-nirmal-kumar-interview




