நேபாளத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகளும் அங்குப் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நேபாளம் வெள்ளம் நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து தமிழக அரசின் புதுடெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட் நாராயணா பேட்டியளித்திருக்கிறார். அவர் பேசுகையில், "கைலாஷ் யாத்திரை மற்றும் சூப்பர் யாத்திரைக்காகத் தமிழகத்திலிருந்து சுமார் 380 முதல் 390 பயணிகள் வரை நேபாளத்திற்குச் சென்றுள்ளனர். இதில் முதற்கட்டமாக 148 பேர் கொண்ட ஒரு குழு பாதுகாப்பாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நாளைத் தமிழகம் திரும்புவார்கள். மேலும் 39 பேர் கொண்ட மற்றொரு குழுவினரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் ஏற்கனவே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலரைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வெங்கட நாராயணா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்து வருகிறோம். இன்னும் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கும் 49 பேரைக் கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே போதுமான அளவு தமிழ் பேசும் அதிகாரிகள் மீட்புக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருமுறை மீட்பு நடவடிக்கைகள் குறித்துத் தகவல்களைப் பெற்று வருகிறோம். மாயமான நமது மக்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதே எங்களின் முதல் இலக்கு" எனப் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/governance/nepal-floods-tn-rescue-update-venkatnarayana



