சென்னை, சென்னை நகரில் கேட்பாரற்று சாலையில் கிடக்கும் வாகனங்களை, போலீசார் கைப்பற்றி வருகிறார்கள். அவ்வாறு கைப்பற்றப்பட்ட 5 ஆயிரத்து 543 வாகனங்கள், சென்னை மாநகராட்சி மூலம் ஏலத்தில் விடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவற்றில் மதிப்பீடு செய்யப்பட்ட 1,936 வாகனங்கள் முதல்கட்டமாக இன்று மின்னணு முறையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. மீதி உள்ள 3,607 வாகனங்களும் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு அடுத்தகட்டமாக ஏலத்தில் விடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல, போதைப்பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 81 மோட்டார் சைக்கிள்கள், 12 ஆட்டோக்கள் உள்ளிட்ட 102 வாகனங்களும், கோர்ட்டில் முறையாக அனுமதி பெற்று மின்னணு வாயிலாக விரைவில் ஏலத்தில் விடப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/5543-abandoned-vehicles-auctioned-online-in-chennai




