பீஜிங், சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், இன்று விண்ணில் ஏவப்பட்ட ஜூகுயே - 3 ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை முதல் முறையாக செங்குத்தாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த சீனா சீனாவின் லேண்ட்ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் இன்று ஜூகுயே -3 என்ற ராக்கெட்டை காலை ஒரு 7.41 மணி அளவில் விண்ணில் செலுத்தியது. இந்திய நேரப்படி அதிகாலை 05.05 மணிக்கு ஜூகுயே -3 விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளிக்கு சென்ற இந்த ராக்கெட் ஒரு வினாடிக்கு 7.8 கி.மீ வேகத்திலும் மணிக்கு 27,000 கி.மீ வேகத்திலும் விண்ணை நோக்கி சென்றது. இதன் பூஸ்டர் பகுதி 137 வினாடிகளில் பிரிந்து சுமார் ஒரு 6 நிமிடங்களில் பூமியை வந்தடைந்தது. செயற்கைகோளை விண்ணில் நிலைநிறுத்தியதும் ராக்கெட்டின் பூஸ்டர் பகுதி பிரிந்து கான்சு மாகாணத்தில் உள்ள மின்சின் பகுதியில் செங்குத்தாக தரையிறங்கியது. சுற்றுப்பாதை ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தி அதன் பூஸ்டர் செங்குத்தாக தரையிறக்கி மீட்டெடுத்த சாதனையை முதன் முறையாக சீனா இன்று படைத்துள்ளது. 20 முறை மறுபயன்பாடு இந்த ராக்கெட் துருப்பிடிக்காத ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டு, திரவ மீத்தேன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் எரிபொருளால் இயக்கப்படுகிறது. இதன் பூஸ்டர் பகுதியை குறைந்தபட்சம் 20 முறை மீண்டும் பயன்படுத்த முடியும் எனவும், அமெரிக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் போலவே இதன் பாகங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் விண்வெளிக்கு ராக்கெட் செலுத்தும் செலவுகள் பெருமளவில் குறையும் எனவும் லேண்ட்ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/china-private-company-sets-record-by-vertically-landing-rocket-booster




