‘ஹவுஸ்புல்-4’, ‘ஆதிபுருஷ்’, ‘க்ரு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், 2021-ம் ஆண்டில் வெளியான ‘மிமி’ படத்துக்கு தேசிய விருது பெற்றார். சமீபத்தில் தனுசுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்த 'தேரே இஷ்க் மே' படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது கிரித்தி சனோன் ‘காக்டெய்ல் 2’ படத்தில் நடித்துள்ளார். இதில் ஷாஹித் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கிரித்தி சனோன் தனது கருமுட்டையை உறையவைத்தது குறித்து பேசியுள்ளார். கட்டாயத்தின் பேரால் பெண்கள் திருமணம் செய்துகொள்வதை விட அறிவியலின் உதவியுடன் விரும்பும்போது குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார் கருமுட்டை உறையவைத்தது குறித்து கிரித்தி சனோன் அந்த பேட்டியில் பேசிய கிரித்தி சனோன், “நான் குழந்தைகளை விரும்புகிறேன். ஆனால் திருமணம் அல்லது குழந்தைப்பேறுக்காக அவசரப்பட விரும்பவில்லை. எதிர்காலத்தில் நான் தயாராக இருக்கும் நேரத்தில் தாயாகும் வாய்ப்பை பாதுகாக்கும் நோக்கில் கருமுட்டையை உறையவைத்தேன் இந்த முடிவுக்குப் பிறகு வயது மற்றும் சமூக அழுத்தம் குறித்த கவலை நீங்கி மனநிம்மதி கிடைத்துள்ளது. இது பயத்தால் அல்ல, எனது வாழ்க்கைக்கு ஏற்ற நேரத்தில் குடும்பம் அமைக்க எடுத்த தனிப்பட்ட முடிவு தற்போது எனது கவனம் வாழ்க்கை, சினிமா பயணத்தை ரசிப்பதில்தான் இருக்கிறது. சரியான நேரம் வரும்போது திருமணம் மற்றும் குழந்தைப்பேறு குறித்து முடிவு எடுப்பேன்” என்று கூறியுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-froze-my-eggs-to-avoid-the-pressure-of-marriage-actress-kriti-sanon




