திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், வள்ளியூர் கோட்டம், களக்காடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் கோட்டம் வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை (23.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-12




