திருப்பூர், அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் பவிஷ் நாராயணன், நடிகை நாக துர்கா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. இந்த படத்தில் இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 10-ந்தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற ‘லவ் ஓ லவ்’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு, செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிற்கு பதிலளித்த அவர், “நான் ஒரு பழைய ஹீரோயின் என்பதுபோல் எனக்கு தோன்றவில்லை. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் பிரபலமான நடிகையைப் போல் உணர்கிறேன். எனது ஹீரோ முதல்-அமைச்சர் விஜய், இன்று தமிழ்நாட்டின் சொத்து. நான் தமிழியில் ஹீரோயினாக நடித்தது 2 படங்கள்தான். அதிலும் விஜய்யின் படத்தில்தான் முதல் முறையாக நான் அறிமுகமானேன். இன்றுவரை என்னை விஜய் பட ஹீரோயினாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். இன்றைய குழந்தைகள் வரை என்னுடன் கனெக்ட் ஆனதற்கு காரணம் விஜய்தான். அதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/chief-minister-vijay-is-an-asset-to-tamil-nadu-it-is-a-matter-of-pride-for-me-that-i-debuted-as-a-heroine-in-his-film-actress-vanitha




