புவனேஷ்வர், பொதுவாக வீடுகளில் தக்காளி, தேங்காய் அல்லது காரச் சட்னி அரைப்பதே வழக்கம். ஆனால், ஒடிசா மாநிலத்தில் காய்கறிகளுக்கு பதிலாக சிவப்பு எறும்புகளை வைத்து தயாரிக்கப்படும் ‘எறும்பு சட்னி’ தற்போது காட்டுத்தீயாய் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகி வருகிறது. கூண்டோடு பிடிபடும் எறும்புகள் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகளில், மரங்களின் இலைகளை ஒன்றாக சேர்த்து இந்த சிவப்பு நெசவு எறும்புகள் பெரிய கூடுகளை கட்டுகின்றன. பழங்குடியின மக்கள் மரங்களில் ஏறி, இந்த எறும்புகளையும் அவற்றின் குட்டிகளையும் கூண்டோடு பிடித்து வருகின்றனர். அம்மி பிடித்து வரப்படும் எறும்புகள் முதலில் தண்ணீரில் தூய்மையாக சுத்தம் செய்யப்படுகின்றன. பின்னர் அதனுடன் உப்பு, காரசாரமான மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து பாரம்பரிய முறையில் அம்மி கல்லில் வைத்து அரைக்கின்றனர். சில இடங்களில் கூடுதல் நறுமணத்திற்காக புதினாவும் சேர்க்கப்படுகிறது. காரமும் புளிப்பும் பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், இந்த சட்னியின் சுவை செம காரமாகவும், புளிப்பு சுவையுடனும் இருக்குமாம். உள்ளூர் பழங்குடியின மக்கள் இதனை சாதம், கூழ் மற்றும் தினை உணவுகளுடன் தொட்டு கொண்டு உண்ணப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக பழங்குடியினர் மட்டுமே சாப்பிட்டு வந்த இந்த எறும்பு சட்னி, தற்போது அதன் அசாத்திய சுவைக்காகவும் அனைத்து தரப்பு பொதுமக்களையும் கவர்ந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/red-ant-chutney-gains-popularity-in-odisha




