சென்னை, கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரியின் விழாவையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “கொல்லிமலையையும் அதைச் சுற்றி அமைந்த வளப்பூர், வாழவந்தி, திண்ணனூர், சேலூர், அரியூர், குண்டூர், தேவானூர், குண்டுனி, ஆலந்தூர், திருப்புலி, எடப்புலி, சித்தூர், பைல், பெரக்கரை உள்ளிட்ட 14 மலைநாடுகளை அரசாண்ட மாவீரன். புறநானூறு, நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட சங்கத்தமிழ் இலக்கியங்கள் போற்றி புகழும் பெருவீரன். இல்லை என்று வந்த புலவர்களுக்கும், பாணர்களுக்கும், இசைவாணர்களுக்கும் அள்ளிக்கொடுத்து தமிழ் மண்ணில் நிலைத்த வள்ளல். விற்போரில் சிறந்து விளங்கிய வீரத்தமிழ்மகன் வல்வில் ஓரியின் பெரும்புகழ் போற்றுவோம்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-celebrate-the-great-renown-of-valvil-ori-seemans-post




