லிஸ்பன், பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகால காதலி ஜார்ஜினா ரோட்ரிக்சும் திருமணம் செய்து கொண்டனர்.போர்ச்சுகல் நாட்டின் கடற்கரை நகரமான காஸ்காய்ஸில் நேற்று இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர்களது 5 குழந்தைகள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது.திருமணத்துக்குப் பிறகு ரொனால்டோவும், ஜார்ஜினாவும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் திருமண மோதிரங்களை மாற்றிக்கொள்ளும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஐந்து குழந்தைகள் ரொனால்டோவும் ஜார்ஜினாவும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் முதல் முறையாக சந்தித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போதில் இருந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.இதற்கிடையில், 2017 ஆம் ஆண்டு நவம்பரில், அலானா மார்டினா என்ற பெண் குழந்தையை ஜார்ஜினா பெற்றெடுத்தார். 2022-ல் பெல்லா எஸ்மரால்டா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. அதற்கு முன், ரொனால்டோவுக்கு வாடகைத் தாய் மூலம் ரொனால்டோ ஜூனியர் மற்றும் மேட்டியோ, ஈவா மரியா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஐந்து குழந்தைகளையும் ஜார்ஜினா மற்றும் ரொனால்டோ இருவரும் வளர்த்து வருகின்றனர். நீண்டகாலமாகவே இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது மணம் முடித்துள்ளனர். சவுதி அரேபியாவில் அடுத்த போட்டி 41 வயதாகும் ரொனால்டோ, 5 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றுள்ளார். கால்பந்து உலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். போர்ச்சுகல் அணிக்காக தனது சாதனைக்குச் சமமான 6-வது உலகக் கோப்பை தொடரில் விளையாடி முடித்துள்ள ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவில் உள்ள அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் உள்நாட்டு கால்பந்து சீசன் சனிக்கிழமை தொடங்க உள்ளது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/ronaldo-ties-the-knot-with-his-girlfriend-wedding-held-in-the-presence-of-their-children




