டோக்கியோ, ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:- வில்வித்தை: ரிகர்வ் பெண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியா-சீனா, அதிகாலை 5.55 மணி, ரிகர்வ் கலப்பு அணிகள் அரையிறுதியில் இந்தியா-ஜப்பான், காலை 8.20 மணி, ரிகர்வ் ஆண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியா-ஈரான், காலை 10.30 மணி. குத்துச்சண்டை: பெண்களுக்கான 75 கிலோ இறுதிப்போட்டியில் லவ்லினா (இந்தியா)-பாவ் ஜியி (சீனா). காலை 10 மணி, 65 கிலோ இறுதிப்போட்டியில் பர்வீன் ஹூடா (இந்தியா)-நியென் சின் சென் (சீன தைபே), பிற்பகல் 2.15 மணி, ஆண்களுக்கன 80 கிலோ இறுதிப்போட்டியில் அங்குஷ் (இந்தியா)-மின்சியோங் கிம் (தென்கொரியா), பிற்பகல் 2.45 மணி. ஆக்கி: பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா, மாலை 3.30 மணி. மல்யுத்தம்: பெண்கள் 50 கிலோ தொடக்க சுற்று, தீபன்ஷி, காலை 7.08 மணி, ஆண்கள் 125 கிலோவில் ரஜத் ருஹால், காலை 7.25 மணி, பெண்கள் 76 கிலோவில் பிரியா, காலை 7.32 மணி, ஆண்கள் 65 கிலோவில் சுஜீத், காலை 8.02 மணி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/aasiya-vilayaatu-india-indru-pangekum-mukkiya-pottigal




