சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாம் நாள் கூட்டம் இன்று நடந்திருந்தது. கோபப்பட்டு விருட்டென கிளம்பிய சி.வி.சண்முகம், பாசமலராக மாறிய பிரேமலதா என அவையில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இங்கே. போஜராஜன் அவையில் பாஜகவின் ஒரே எம்.எல்.ஏவான போஜராஜன் 'வெளிநடப்பு' செய்கிறேன் என வெளியே சென்று டீ யைப் போட்டு விட்டு வந்த சம்பவம், அவையில் கலகலப்பை உண்டாக்கியது. நீட் தீர்மானத்தை எதிர்த்து போஜராஜன் பேசிவிட்டு வெளிநடப்பு செய்யப் போவதாக கூறினார். வழக்கமாக வெளிநடப்பு செய்வதாக கூறுவோர் அவைக்கு வெளியே கேட் 4 இல் காத்திருக்கும் பத்திரிகையாளர்களை வந்து சந்திப்பார்கள். பிரஸ்மீட்டை முடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து அவைக்குள் செல்வார்கள். போஜராஜன் வெளிநடப்பு என்றவுடன் பத்திரிகையாளர்கள், கேமராமேன்களெல்லாம் அவசர அவசரமாக அவருக்காக தயாரானார்கள். ஆனால், போஜராஜன் ஒரு 5 நிமிடம் மட்டும் அவைக்கு வெளியே வந்து டீ சாப்பிட்டுவிட்டு மீண்டும் அவைக்குள் சென்றுவிட்டார். சி.வி.சண்முகம் இத்தனை விரைவான வெளிநடப்பை கண்டு சபாநாயகரே ஆச்சர்யப்பட்டார். 'வெளிநடப்பை முடிச்சிட்டு வந்துட்டீங்க. இப்போ முடிவு எதுவும் மாறியிருக்கா.' என சபாநாயகர் கமெண்ட் அடிக்க அவையே சிரித்தது. போஜராஜன் வெளியே வருவார் என காத்திருந்த பத்திரிகையாளர்கள்தான் ஏமாற்றமடைந்து போயினர். சி.வி.சண்முகம் இன்னமும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார். நேற்று கூட அவைக்கு வெளியே எடப்பாடிக்கு எதிராக கடுமையாக பேசியிருந்தார். இன்றும் சி.வி.சண்முகம் அவைக்கு வந்திருந்தார். பட்ஜெட் விவாதத்தில் எடப்பாடி இன்று உரையாற்றுவதாக இருந்தது. கொஞ்சம் தாமதமாகத்தான் எடப்பாடி அவைக்கும் வந்தார். அத்தனை நேரமும் அவைக்குள் இருந்த சி.வி.சண்முகம் அடுத்ததாக எடப்பாடி பேசுவார் எனும் நிலையில் சட்டென அவையை விட்டு வெளியேறி கிளம்பிவிட்டார். இன்றைக்கு அவைக்கு முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இருவருமே தாமதமாகத்தான் வந்தனர். முதல்வர் மாநிலக் கல்லூரியில் ஒரு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துவிட்டு அவைக்கு வந்தார். முதல்வர் தாமதமாகத்தான் வருவார், தீர்மானங்கள் தாமதமாகத்தான் நிறைவேற்றப்படும் என்பது முன்பே தெரிந்திருந்ததால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் தாமதமாகவே அவைக்கு வந்தார். பிரேமலதா அவையில் பிரேமலதா பேச எழுந்தரிக்கும் போதெல்லாம் சபாநாயகரை பேரவைத் தலைவர் என அழைக்காமல், 'ஓகே அண்ணா.சரிங்க அண்ணா.' என பாசமலராக மாறிவிடுகிறார். மேகதாது தீர்மானத்தின் போதும் சரி, இன்று நீட் தீர்மானத்தின் போதுமேகூட அண்ணா.அண்ணா என்றுதான் அழைத்தார். உடனே சுதாரித்துக் கொண்ட பிரேமலதா.'மன்னிக்கவும் பேரவைத் தலைவரே.' என சரி செய்து பேசிவிடுகிறார். இணையத்தில் அடிக்கடி ட்ரெண்ட் ஆகும் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி இன்றுதான் முதன் முதலாக அவையில் பேசினார். என்னுடைய கன்னிப் பேச்சு இதுவென கூறி ஆரம்பித்த கனிமொழி, 'மக்கள் மனதில் அழகிய தமிழ் மகனாய் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் "பீஸ்ட்" மோடிற்கு சென்று விடுவார். பெண்களை சீண்டுபவர்களுக்கு ஒரு "வேட்டைக்காரனாகவும்" பெண்களுக்கு ஒரு "காவலனாகவும்' என விஜய் நடித்த படங்களின் பெயரை வைத்து கவிதையாய் பாடினார். ஒரு நிமிடத்தில் இது சட்டமன்றமா.இல்லை ஆடியோ லாஞ்ச் மேடையா எனும் சந்தேகமே வந்துவிட்டது. கனிமொழி இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பட்ஜெட் மீதான விவாவதமும் நடந்ததால் இன்று 7 மணி நேரத்துக்கு மேல் அவை நடந்திருந்தது. 'சுகர் பேஷண்ட்டுய்யா.நானு' என சில எம்.எல்.ஏக்கள் அவையிலேயே கண் அசந்துவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/cv-shanmugam-leaves-abruptly-kanimozhi-recites-poetry-premalathas-pasamalar-moment-assembly-highlights




