நாமக்கல், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (75 வயது). இவர் யாசகம் எடுத்து அரசு பள்ளிகளுக்கும், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கும் பணத்தை வழங்கி வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்த பூல்பாண்டியன், தான் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை, நாமக்கல் கலெக்டர் மதுபாலனிடம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். தொடர்ந்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ரூ.10 ஆயிரம் வழங்கிய முதியவர் பூல்பாண்டியனுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், பணம் பெற்றதற்கான ஒப்புகை சான்றிதழை வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-donates-rs-10000-alms-to-chief-ministers-relief-fund




