சென்னை, வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மழை தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இந்த நிலையில், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/weather/a-new-low-pressure-area-has-formed-over-the-bay-of-bengal




