சென்னை, தேசிய மாணவர் படை (என் சி சி) சார்பில் சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் 'அகில இந்திய வாயு சைனிக் முகாம்' செப்டம்பர் 30 அன்று தொடங்கியது. இம்முகாமை தொடங்கி வைத்து பேசிய என் சி சி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் பிரிவு தலைவர் கமடோர் சுதீப் நம்பியத், தேசிய அளவிலான இம்முகாம் முதன்முறையாக சென்னையில் நடைபெறுவதாகவும், விரைவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் என் சி சி மாணவ மாணவிகளுக்கு ட்ரோன் பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். என் சி சி மாணவர்கள் சி சான்றிதழ் பெற்றால், அவர்கள் பட்டம் பெற்றதும் பாதுகாப்புப்படைகளில் நேரடியாக அதிகாரிகள் அளவில் பனி நியமனம் பெறுவதற்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள இயலும் என்றார். வரும் 13 வரை இம்மாபெரும் முகாம் நடைபெறவுள்ளது. என்.சி.சி. விமானப் படைப் பிரிவின் 17 இயக்குநரகங்களைச் சேர்ந்த மொத்தம் 646 மாணவர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். இம்முகாமில், பெண்களுக்கு அதிகாரமளித்தலில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஒரு என்.சி.சி. இயக்குநரகத்திற்கு தலா 16 மூத்த பிரிவு மாணவிகள் வீதம் அவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இளம் பெண்களுக்கு அவர்களின் விமானப் போக்குவரத்து சார்ந்த லட்சியங்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பை வழங்குகிறது. விமான இயக்கம், சுகாதாரம், தூய்மை, விமான மாதிரி உருவாக்கம்,.22 ரக துப்பாக்கி சுடுதல், ஸ்கீட் ஷூட்டிங், அணிவகுப்பு, கூடாரம் அமைத்தல், ஓட்டம் ஆகிய போட்டிகள் மூலம் என் சி சி வீரர் வீராங்கனைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். வழக்கமாக 12 நாட்கள் நடைபெறும் இந்த முகாம், இம்முறை முதன்முறையாக 14 நாட்கள் நடைபெறவுள்ளது. மேலும், பல தலைமுறை இந்திய விமானப்படை பயிற்றுவிப்பாளர்களை உருவாக்கிய இடமான தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இந்த முகாம் நடைபெறுவதும் இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்வை, என்.சி.சி குழு தலைமையகம் சென்னை 'பி'-யின் குழுத் தளபதி குரூப் கேப்டன் கே.எம். ரகுராமன் மற்றும் அவரது குழுவினர் வழிநடத்துகின்றனர். மேலும், தாம்பரம் விமானப்படை நிலையத்தின் தலைவர் ஏர் கமடோர் தபன் சர்மா, இம்முகாமிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த விமானப்படைப் பிரிவு மாணவர்களைப் போட்டியிடவும், கற்கவும், வளரவும் உதவும்இம்முகாமில் ஒழுக்கம், தலைமைத்துவம், குழுப்பணி, தொழில்நுட்பத் திறன், உடற்தகுதி மற்றும் விளையாட்டு மனப்பான்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-camp-for-ncc-air-wing-cadets-begins-tomorrow-in-tambaram



