உசிலம்பட்டி, கதம்ப வண்டுகள் கொட்டியதில் 25 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் படுகாயம் உசிலம்பட்டி அருகே மொண்டிக்குண்டு கிராமத்திலுள்ள கன்னிமார் கோவிலில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேற்று பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். பொங்கல் வைத்த போது அடுப்பில் இருந்து வெளியேறிய புகையால் கதம்ப வண்டுகள் கூட்டில் இருந்து வெளியேறியது. பின்னர், அங்கு சுற்றி இருந்தவர்கள் அனைவரையும் சரமாரியாக கொட்டியது. இதில் பலத்த காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகினறனர். விசாரணை இது குறித்து தகவல் அறிந்த உத்தப்பநாயக்கனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-during-pongal-celebration-at-the-temple-25-people-injured-after-being-attacked-by-kadamba-beetles




