சென்னை, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பது மிகுந்த கவலையளிக்கிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் அங்குச் சிக்கியுள்ளனர். இதில் தமிழ்நாட்டின் கும்பகோணம், தஞ்சை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர். வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும், உலக நாட்டு மக்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நேபாள அரசுடன் இணைந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைந்து அனைத்து உதவிகளையும் வழங்கிட வேண்டும். அவசர உதவி எண்கள் (Emergency Contacts): கட்டணமில்லா அவசர எண் (Toll-free): 1234 ஹாட்லைன் (Hotline): 1144 சுற்றுலா காவல்துறை (Tourist Police): 9851289445” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-central-government-must-provide-assistance-on-a-war-footing-mp-manickam-tagore



