‘டோரதி’ படத்தில் பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார் என்று படக்குழுவை சூர்யா பாராட்டியுள்ளார். ‘டோரதி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா 1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி’, சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. திரைப்பிரபலங்கள் பாராட்டு வெளியானது முதலே ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்டோரும் ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் மேலும் அதிகரித்துள்ளது. சூர்யா பாராட்டு இந்த நிலையில், சூர்யா ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் “டோரதி படத்தில் பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார். கீர்த்தி, சனந்த், ரிஷிகாந்தின் நடிப்பு படத்திற்கு உயிர் சேர்க்கிறது. இசைஞானியின் இசை மனதை நெகிழ வைக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். ‘டோரதி’ படம் 6 நாட்களில் ரூ.7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோரதி பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள். இயக்குநர் சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார். Keerthy, Sanath, Rishikanth ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிர் சேர்க்கிறது. இசைஞானி அவர்களின் இசை மனதை நெகிழ வைக்கிறது. படக்குழுவினர்… — Suriya Sivakumar (@Suriya_offl) October 1, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/they-dare-to-talk-about-unspeakable-things-in-the-film-dorothy-suriya-praises



